How Collegium Works?

Collegium முறை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உடைய 5 பேர் கொண்ட குழுவே Collegium. Artice 124 படி தலைமை நீதிபதி மற்றும் இதர நீதிபதிகளை நியமிக்க Collegium குழு சீனியாரிட்டி அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஒன்றிய சட்ட அமைச்சருக்கு பரிந்துரை செய்யும். அதை ஒன்றிய சட்ட அமைச்சர், "தலைமை" அமைச்சருக்கு பரிந்துரை செய்வார். தலைமை அமைச்சரான பிரதமர் அந்த பரிந்துரையை குடியரசு தலைவர்க்கு அனுப்பி நியமிக்க ஆலோசனை வழங்குவார். இதுவே Article 217 படி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி.அல்லது இதர நீதிபதிகளின் நியமனம் என்றால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி+ மேலும் 2 நீதிபதி கொண்ட Collegium உள்ளது. இவர்கள் மாநில முதல்வர்க்கு பரிந்துரை செய்வர். முதல்வர் கவர்னருக்கு அந்த பரிந்துரையை அனுப்புவார். இதனை கவர்னர், ஒன்றிய சட்ட அமைச்சர்க்கு அனுப்புவார். இவர் பிரதமர்க்கு பரிந்துரை செய்வார். பிரதமர் குடியரசு தலைவர்க்கு ஆலோசனை வழங்குவர். குடியரசு தலைவர் நியமனம் செய்வார். Collegium மூலம் பரிந்துரைக்கப்பட்டவர்களை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய சட்ட அமைச்சர் அப்பரிந்துரைப் பட்டியலை திரும்...