How Collegium Works?
Collegium முறை.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உடைய 5 பேர் கொண்ட குழுவே Collegium.
Artice 124 படி தலைமை நீதிபதி மற்றும் இதர நீதிபதிகளை நியமிக்க
Collegium குழு சீனியாரிட்டி அடிப்படையில் தேர்ந்தெடுத்து
ஒன்றிய சட்ட அமைச்சருக்கு பரிந்துரை செய்யும்.
அதை ஒன்றிய சட்ட அமைச்சர், "தலைமை" அமைச்சருக்கு பரிந்துரை செய்வார்.
தலைமை அமைச்சரான பிரதமர் அந்த பரிந்துரையை குடியரசு தலைவர்க்கு அனுப்பி நியமிக்க ஆலோசனை வழங்குவார்.
இதுவே Article 217 படி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி.அல்லது இதர நீதிபதிகளின் நியமனம் என்றால்
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி+ மேலும் 2 நீதிபதி கொண்ட Collegium உள்ளது.
இவர்கள் மாநில முதல்வர்க்கு பரிந்துரை செய்வர். முதல்வர் கவர்னருக்கு அந்த பரிந்துரையை அனுப்புவார்.
இதனை கவர்னர், ஒன்றிய சட்ட அமைச்சர்க்கு அனுப்புவார். இவர் பிரதமர்க்கு பரிந்துரை செய்வார்.
பிரதமர் குடியரசு தலைவர்க்கு ஆலோசனை வழங்குவர். குடியரசு தலைவர் நியமனம் செய்வார்.
Collegium மூலம் பரிந்துரைக்கப்பட்டவர்களை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய சட்ட அமைச்சர் அப்பரிந்துரைப் பட்டியலை திரும்ப கொலீஜியத்திற்கு அனுப்பலாம்.
ஆனாலும் அதையே Collegium மீண்டும் பரிந்துரை செய்தால் நியமனம் செய்தே ஆகவேண்டும்.
2014~ல் National Judicial Appointment Commission (NJAC) என்ற அமைப்பை அரசியலமைப்பு சட்ட திருத்தம் மூலம் NDA அரசு கொண்டு வந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள், ஒன்றிய சட்ட அமைச்சர் கொண்ட Judicial Commission மூலம் நீதிபதிகளை நியமனம் செய்ய அதைக் கொண்டு வந்தனர்.
ஆனால் அதில் அரசின் தலையீடு இருக்கும் என்ற காரணத்தால் உச்ச நீதிமன்றம் அதை தடை செய்தது.
{Justice Chalemeswar ஒருவர் தான் தடை செய்த தீர்ப்பை எதிர்த்ததாக படித்த நினைவு. உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதி மற்றும் administration குளறுபடி காரணமாக வந்த அந்த Controversial Press meet~ல் ரஞ்ஜன் கோகோயுடன் இவரும் இருந்தார்.}
நீதிபதி நியமனத்தில் ஆளும் அரசின் தலையீடற்ற நியமனம் வேண்டும் என்பது நீதிமன்றத்தின் வாதம். Executive vs Judiciary!
ஆனாலும் Collegium முறையில் வெளிப்படைத் தன்மை(transparency) இல்லை எனவும், Accountability இல்லை என்பதாகவும், Nepotism உள்ளதாகவும், ஆளும் அரசின் தலையீடு உள்ளதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கிறது.
அது உண்மையாகவும் இருக்கிறது!
Comments
Post a Comment