Abrogation of Article 370: A Fraud on Constitution.

Has Article 370 been Scrapped?
================================
இல்லை, அதாவது இன்னும் இல்லை.  பிரிவு 370 இன்னும் நீக்கம் செய்யப்படவில்லை.



பிரிவு 370 உட்பிரிவு(1)(c) படி பிரிவு 370ஐ வெறுமனே ஜனாதிபதி ஆணையின் மூலம் நீக்கவும் முடியாது.

Condition Precedent: காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் (Constituent Assembly of Kashmir) பரிந்துரையின் மூலம், நாடாளுமன்றத்தில் பிரிவு 368 கூறும் வரையறையின்  படி தான் நீக்க முடியும்.

(the provisions of article 1 and of this article shall apply in relation to that State)

பிரிவு 370 உட்பிரிவு 1(d) படி அரசியலமைப்பின் மற்ற கூறுகள் காஷ்மீருக்கு ஏற்றவாறு ஜனாதிபதி உத்தரவு/ஆணையின் மூலம் மாற்றி செயல்படுத்தலாமே ஒழிய பிரிவு 370ஐ முற்றிலுமாக மாற்ற முடியாது.

(such of the other provisions of this Constitution shall apply in relation to that State subject to such exceptions and modifications as the President may by order specify)

எனவே பிரிவு 370ல் மாற்றம் செய்ய பிரிவு 367ல் தான் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

பிரிவு 370 உட்பிரிவு(1)ன் படி இந்திய அரசியலமைப்பின் பிற கூறுகளை  காஷ்மீரில் செயல்முறைப்படுத்த ஜம்மு காஷ்மீர் அரசின் ஒத்திசைவு/ ஒப்புதல் (Concurrence)  வேண்டும்.

அதாவது இந்திய இணைப்பு ஒப்பந்தத்தில்(Instrument of Accession) குறிப்பிடப்பட்ட இந்திய அரசியலமைப்பின் குறிப்பிட்ட கூறுகளைத் தவிர மத்தியப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியலில் உள்ள மற்ற சரத்துகளை காஷ்மீரில் அமலாக்க காஷ்மீர் அரசின் ஒப்புதல் கண்டிப்பாக வேண்டும்.

(such other matters in the said Lists as, with the concurrence of the Government of the State, the President may by order specify.)

சட்டப்பிரிவு 370 உட்பிரிவு (3)ன் படி பிரிவு370ஐயே முற்றிலுமாக நீக்க அல்லது மாற்றம் செய்ய கஷ்மீரத்து அரசியல் நிர்ணய சபையின்(Constituent Assembly of Kashmir) ஒப்புதல் கண்டிப்பாக வேண்டும்.

(Notwithstanding anything in the foregoing provisions of this article, the President may, by public notification, declare that this article shall cease to be operative or shall be operative only with such exceptions and modifications and from such date as he may specify:

***Provided ( இது மிக முக்கியம்)that the recommendation of the Constituent Assembly of the State referred to in clause (2) shall be necessary before the President issues such a notification.****)

கவனிக்க.
முன்னது, காஷ்மீர் அரசு (Government of the State of Kashmir.)

பின்னது, காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை(Constituent Assembly of Kashmir.)

ஆனால் காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை தனக்கான அரசியல் அமைப்பை உருவாக்கி கொண்டவுடன் 1957லிலேயே அது கலைக்கப்பட்டு விட்டது.

அதை வைத்து தான் உச்ச நீதிமன்றமே கூட பல முறை பிரிவு 370 தற்காலிகக் கூறு அல்ல அது நிரந்தரமானது தான் என்றது.

ஏனெனில் நிர்ணய சபை என்ற ஒன்று இல்லாத போது அதை நீக்க அதனிடம் எப்படி ஜனாதிபதி ஒப்புதல் கேட்க முடியும்? அதனால் அது நிரந்தரம் என்று தான் கொள்ளப்படும்.

இப்போது அதை வேறுவிதமாக பொருள் கொள்வதன்( Interpretation) மூலம் அதை நீக்கவோ மாற்றவோ வழி வகை செய்யலாம்.

எப்படி என்றால்

அரசியல் நிர்ணய சபை என்று வரும் இடத்தில் சட்ட சபை என்று பொருள் கொள்ளலாம் என்றும்

மாநில அரசின் ஒப்புதல் என்று வரும் இடத்தில் அம்மாநில ஆளுநர்(Governor) என்றும் பொருள் கொள்ளலாம் என்று சட்ட திருத்தமான C.O.272 சொல்கிறது.

இப்படி பொருள் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்றால், பொருள் கொள்ள அதாவது வேறு விதமாக Interpret செய்ய பிரிவு 370ஐ திருத்துவதற்க்கு முன்பு பிரிவு 367ஐ திருத்த வேண்டும்.

அதைத் தான் இந்த மோ(ச)டி அரசு செய்து இருக்கின்றது.

அதாவது பூவை புய்பம் என்றும் சொல்லலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் அரசியலமைப்பின் பிரிவு 367ஐ திருத்த ஜனாதிபதிக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது என்பது அரசியலமைப்புக்கு தான் வெளிச்சம்.

இது பிரிவு 367ல் எப்படி பொருள் கொள்வது என ஜனாதிபதி கொண்டு வந்துள்ள புதியத் திருத்தம். 👇

In exercise of the powers conferred by clause (1) of article 370 of the Constitution, the President, "with the concurrence of the Government of State of Jammu and Kashmir"

என்று C.O.272 ஆரம்பிக்கிறது (இணைப்பில் உள்ள படம் பார்க்க).

இதில் உள்ள "With the Concurrence of Government of the State of Jammu and Kashmir" என்பது

காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதல் என்று நினைக்க வேண்டாம் அது வெறுமனே கவர்னரின் ஒப்புதல் ஆகும்.

அரசியல் நிர்ணய சபை என்பதை மாநில சட்ட சபை எனவும் (by this they changed Clause 3 of Art.370) ,

(***in proviso to clause (3) of article 370 of this Constitution, the expression “Constituent Assembly of the State referred to in clause (2)” shall read “Legislative Assembly of the State***”)

மாநில அரசு & அமைச்சரவை ஆலோசனைப் படி செயல்படும் சாதார்-இ-ரியாசத்  என்பதை வெறுமனே மாநில ஆளுநர் எனவும்

(References to the person for the time being recognized by the President on the recommendation of the Legislative Assembly of the State as the Sadar-i-Riyasat of Jammu and Kashmir, acting on the advice of the Council of Ministers of the State for the time being in office, **shall be construed as references to the Governor of Jammu and Kashmir**)

ஜனாதிபதியானவர் பாஜகவின் சொல் கேட்டு பிரிவு 370 உட்பிரிவு 1(d)ஐ (President may by order specify) தனக்கு சாதகமாக கொண்டு பிரிவு 367 என்ற சரத்தை திருத்தியதன் மூலம் பிரிவு 370ன் பிற சரத்துகளை மாற்றி இருக்கிறார்கள்.

இப்போது நிர்ணய சபை ஒப்புதல் தேவை இல்லை. சட்ட சபையே போதுமானது. ஆனால் கஷ்மீரில் இப்போது சட்ட சபை இல்லை.

அது கலைக்கப்பட்டு விட்டது. கவர்னர் ஆட்சி முடிந்து இப்போது ஜனாதிபதி ஆட்சி தான் நடக்கிறது.

 மக்களாட்சி நடக்கவில்லை. அப்துல்லா, மெஹபூபா போன்றோர் கோரிக்கை வைத்தும் அழுத்தம் கொடுத்தும் கூட மத்திய அரசு தேர்தல் நடத்த மறுத்துவிட்டது.

அதனால் சட்டசபை செய்யவேண்டிய பணியை நாடாளுமன்றம் செய்யலாம் என்ற ஒரு குறுக்கு வழியைக் கொண்டு நிறைவேற்றி விட்டார்கள்.

மேலும் கவர்னர் தன்னிச்சையாக(Discretion) செயல்பட முடியாது. சட்டப்பிரிவு 163ன் படி கவர்னரின் ஒப்புதல் என்பது

அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் ஒப்புதலோடு சேர்ந்தது ஆகும்.

(There shall be a council of ministers to aid and advice the Governor in the exercise of his functions)

சட்டசபை இல்லை. அதனால் அமைச்சரவை இல்லை.

பிரிவு 367ல் உட்பிரிவு (4)யினை சேர்த்ததான் மூலம் (See Picture)
அது வெறுமனே கவர்னர் ஒப்புதல் மட்டும் என்று மாற்றி அதையும் சமாளித்து விட்டார்கள்.

ஆனால் இதில் இன்னொரு சட்ட சிக்கல் உள்ளது. அதுதான் பிரிவு 370 என்ற சரத்தைக் கொண்டு பிரிவு 370ஐயே மாற்றியது.

ஜனாதிபதியை வைத்து பிரிவு 370ன் மூலம் பிரிவு 367யினை திருத்தம் செய்து அதன் மூலம் மறைமுகமாக பிரிவு 370ஐயே மாற்றி உள்ளனர். இது அரசியலமைப்பு விதிக்கு மாறானது.

You cannot do Indirectly what you cannot do Directly.( Doctrine of Colorable Legislation)

ஆக, மாநில அரசின் ஒப்புதல் (Concurrence of State Government) என்று சொல்லும் பிரிவு 370(2)ஐயும்

அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரையின் மூலம் (Recommendation of Constituent Assembly) என்று சொல்லும் பிரிவு 370(3)ஐயும் கொண்டு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால்

ஐயோ, அதெல்லாம் ரொம்ப கஷ்டம் என்று உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் பிரிவு 370(1)(d)ஐ சாதகமாகக் கொண்டு

பிரிவு 367, 370(2), 370(3)ஐயே மாற்றி வேறு விதமாக பொருள் கொள்வது எப்படி சரியனதாக இருக்கும்?

அப்படி பார்த்தால் ஒட்டு மொத்த பிரிவான 370ம் அல்லவா மாற்றப்பட்டு இருக்கிறது.

மேலும் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதும் கூட சட்டத்திற்கு புறம்பானது.

ஆக, இவை அனைத்தும் கூட்டாட்சித் தத்துவத்தையே சிதைக்கிறது.

Hence it is an unconstitutional one and it should be declared null and void.

Comments

Popular posts from this blog

Hatred in the Belly of Upper Castes and Our Ilayaraja 😍

இளையராஜா எனும் கலகக்காரன் 🔥

தொ.ப என்ன சொல்கிறார்?